இந்தியாவிலிருந்து யாழ்பாணத்திற்கு வரவுள்ள அதிசொகுசுக் கப்பல்!
#India
#SriLanka
#Jaffna
#Tourist
#Lanka4
#Kangesanthurai
#Ship
#Tourism
#SHELVAFLY
Mayoorikka
12 hours ago

இந்தியாவில் இருந்து Cordelia Cruises அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பலானது எதிர்வரும் ஆகஸ்ட் 15 மற்றும் 22 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளது.
குறித்த சுற்றுலா பயணிகள் கப்பலானது கடந்த 2023ஆம் ஆண்டு 9 தடவைகள் வந்திருந்தது. அத்துடன் 2024ஆம் ஆண்டு 6 தடவைகள் இலங்கைக்கு வந்தது. இது இவ்வாறு இருக்கையில் இந்த ஆண்டு மேற்குறித்த இரண்டு திகதிகளில் குறித்த கப்பல் இலங்கைக்கு வரவுள்ளது.
காலை காங்கேசன் துறைமுகத்தை வந்தடையும் கப்பலில் வரும் பயணிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள கோட்டை உள்ளிட்ட சில இடங்களை பார்வையிட்ட பின்னர் மீண்டும் இந்தியாவை சென்றடையவுள்ளனர்.
இந்த கப்பலானது மிகவும் பாரிய ஒரு சுற்றுலா பயணிகள் கப்பலாக காணப்படுகின்றது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



