யாழில் பதிவு செய்யப்படாத தொழிற்கல்வி நிலையங்களை பதிவு செய்ய நடவடிக்கை!

#SriLanka #Jaffna #education #Institute
Lanka4
1 month ago
யாழில் பதிவு செய்யப்படாத தொழிற்கல்வி நிலையங்களை பதிவு  செய்ய நடவடிக்கை!

பதிவு செய்யப்படாத தொழிற்கல்வியை நடத்திவரும் நிறுவனங்களை மூன்றாம் நிலைக் கல்வி ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்வது தொடர்பாக அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல் மூன்றாம் நிலைக் கல்வி ஆணைக்குழுவின் நிலையங்களை பதிவு செய்யவும் மதிப்பீட்டுக்குமான பிரதிப் பணிப்பாளர் திரு. சம்பிக்க குணதிலக்க அவர்கள் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களை (25.07.2025) ஆம் திகதி அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இதன் போது யாழ்ப்பாண மாவட்டத்தில் மூன்றாம்நிலை கல்வி ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் பற்றி கலந்துரையாடியதுடன், பதிவு செய்யப்படாத நிறுவனங்களை மூன்றாம் நிலைக் கல்வி ஆணைக்குழுவின் கீழ் பதிவுசெய்யவும் அது தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடலை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் நடாத்தவும் அரசாங்க அதிபர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.

மேலும் மூன்றாம் நிலைக் கல்வி ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்படாது தொழிற்கல்வியை நடத்திவரும் நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை பிரதேச செயலக ரீதியாக பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மூலமாக பிரதேச செயலாளரின் நெறிப்படுத்தலுடன் பதிவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது. இக் கலந்துரையாடலில் பணிப்பாளுடன், உதவிப் பணிப்பாளர் திரு. எஸ். எஸ். கல்பேச், தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை பிரதிப்பணிப்பாளர் திரு. கே. நிரஞ்சன் மற்றும் மாவட்ட திறன் அபிவிருத்தி இணைப்பாளர் திரு. த.நீலாம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1753481845.jpg



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!