யாழில் சமுர்த்தி அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பான முன்னேற்றக் கூட்டம்!

#SriLanka #Jaffna #Development #samurthi
Lanka4
1 week ago
யாழில் சமுர்த்தி அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பான முன்னேற்றக் கூட்டம்!

சமுர்த்தி வங்கி முகாமையாளர்களுடனான சமுர்த்தி அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பான முன்னேற்றக் கூட்டம் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திரு. F. C. சத்தியசோதி அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (25.07.2025) மு.ப 11.00 மணிக்கு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டு சமுர்த்தி அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்கள் ஆராய்ந்தார்.

மேலும், சமுர்த்தி முகாமையாளர்களால் நிர்வாக ரீதியான செயற்பாட்டிற்கான கணினி மற்றும் இதர தேவைப்பாடுகள் தொடர்பான கோரிக்கைகள் அரசாங்க அதிபரிடம் முன்வைக்கப்பட்ட போது, அரசாங்க அதிபர் அவர்கள் சமுர்த்தி பணிப்பாளர் நாயகத்துடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முகாமையாளர்களின் கோரிக்கைகளை எடுத்துக் கூறி கலந்துரையாடினார். மேற்படி கோரிக்கைகளை இவ்வாண்டுக்குள் கட்டம் கட்டமாக நிவர்த்தி செய்வதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்ததாக அரசாங்க அதிபரால் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இக் கூட்டத்தில் மாவட்டச் செயலக விடய சமுர்த்தி முகாமையாளர்கள், மாவட்ட கண்காணிப்பு சமுர்த்தி முகாமையாளர், வங்கி முகாமையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1753481845.jpg



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!