காணிகள் தொடர்பான காணிச் சட்டங்கள் மற்றும் அரச காணிகளை கையளித்தல் மற்றும் பகிர்வு செய்வது தொடர்பான பயிற்சிநெறி!

#SriLanka #Trincomalee #land
Lanka4
1 week ago
காணிகள் தொடர்பான காணிச் சட்டங்கள் மற்றும் அரச காணிகளை கையளித்தல் மற்றும் பகிர்வு செய்வது தொடர்பான பயிற்சிநெறி!

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், காணிகள் தொடர்பான காணிச் சட்டங்கள் மற்றும் அரச காணிகளை கையளித்தல் மற்றும் பகிர்வு செய்வது தொடர்பான பயிற்சிநெறி  (25)  திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம் ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த பயிற்சிநெறியானது திருகோணமலை மாவட்டத்தில் கடமையாற்றும் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் மற்றும் உதவி பிரதேச செயலாளருக்கும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

காணி முகாமைத்துவ அலுவல்கள், அரச தொழில்முயற்சிக் காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் முன்னாள் செயலாளர் (ஓய்வு நிலை) எஸ்.டி.ஏ.பி.பொரலெஸ்ஸா அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார். இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், கிழக்கு மாகாண காணி ஆணையாளர், கிழக்கு மாகாண உதவி காணி ஆணையாளர், காணி ஆணையாளர் நாயகம் (மாகாணங்களுக்கு இடைப்பட்ட), பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1753481845.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!