பாடசாலை மாணவர்களுக்கு பேருந்துச் சேவைக்காக கோரிக்கை விடுத்த சத்தியலிங்கம் எம்.பி

பாடசாலை மாணவர்களுக்கான பிரத்தியேகமான பேருந்துச்சேவை ஆரம்பிக்கப்பட வேண்டுமென இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 22.07.2025 அன்று பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெற்ற போக்குவரத்து அமைச்சின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டபோதே இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்கா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டபோது அவர் மேலும் தெரிவித்ததாவது, பாடசாலை மாணவர்களுக்கான பிரத்தியேகமான பேருந்துச்சேவை ஆரம்பிக்கப்பட வேண்டும், குறிப்பாக வவுனியா - யாழ்ப்பாணம் வீதியில் பயணிக்கின்ற பேரூந்துகள் மாணவர்களை ஏற்றுச்செல்வதில்லை.
இதனால் மாணவர்கள் சிரமங்களை எதிர்நோக்கின்றார்கள் என்றார். பாராளுமன்ற உறுப்பினரின் கோரிக்கையினை நிறைவேற்ற உரிய திணைக்களத்திற்கு பணிப்புரை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதியளித்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



