கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் தூக்கில் தொங்கி உயிர்மாய்ப்பு!
#SriLanka
#Police
#Kilinochchi
#Lanka4
#SHELVAFLY
Mayoorikka
17 hours ago

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குடும்பப் பிணக்கு தொடர்பாக விசாரணைகளுக்காக சந்தேக நபர் ஒருவர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
பின்னர் அவர் பொலிஸ் நிலையத்தின் விசாரணைக் கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று மதியம் 12.08 மணி அளவில் தான் அணிந்திருந்த சாரத்தின் ஒரு பகுதியை கிழித்து தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த இரத்தினம் ராசு வயது (66) என்பவரே இவ்வாறு உயிரை மாய்த்துக்கொண்டவராவார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



