அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் $23.4 மில்லியன் மதிப்புடைய கொக்கைன் கடத்தல்

#Arrest #Canada #America #drugs #Smuggling
Prasu
10 hours ago
அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் $23.4 மில்லியன் மதிப்புடைய கொக்கைன் கடத்தல்

அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் பிரவேசிக்க முயன்ற ஒரு சரக்கு லாரியில், சுமார் 23.4 மில்லியன் டொலர் மதிப்புடைய கொக்கெயின் மறைத்து கடத்தப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் வின்சர்-டெட்ராய்ட் எல்லைப் பகுதியில் உள்ள அம்பாசடர் பாலம் வழியாக இடம்பெற்றது.

கனடிய எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவன Canada Border Services Agency (CBSA) அதிகாரிகள் நடத்திய இரண்டாவது ஆய்வின் போது, ஒரு சரக்கு லாரியின் டிரெய்லரில் குப்பை பைகளில் போதைப் பொருள் கடத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட கொக்கேய்னின் மொத்த எடை 187.5 கிலோகிராம். சம்பவம் தொடர்பாக, ஒன்டாரியோ மாநில ரிச்ச்மண்ட் ஹில்லைச் சேர்ந்த கம்பிஸ் கரந்திஷ் (வயது 55) என்பவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட போதைமருந்துகள் ராயல் கனேடியன் மவுண்டட் போலீசிடம் (RCMP) ஒப்படைக்கப்பட்டன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1753256263.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!