ChatGPT சிந்தனை ஆற்றலை குறைக்கும் - வெளியான அதிர்ச்சி தகவல்!

#technology #information #ChatGPT
Lanka4
9 hours ago
ChatGPT சிந்தனை  ஆற்றலை குறைக்கும் - வெளியான அதிர்ச்சி தகவல்!

AI தொழில்நுட்பமான ChatGPT சிந்தனை ஆற்றலைக் குறைக்கூடியது என்று ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் ChatGPT ஐ கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் MIT மற்றும் சில உலகளாவிய கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய 'Your Brain on ChatGPT' எனும் ஆய்வறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. 

அதில், அதிகமாக AI தொழில்நுட்பங்களை சார்ந்திருப்பது சிந்தனை திறன், நினைவகம் மற்றும் படைப்பாற்றலைக் குறைக்கூடியது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வறிக்கையை வரவேற்றுப் பேசியிருக்கும் Tech Whisperer நிறுவனத்தின் ஜஸ்ப்ரீத் பிந்த்ரா, “ChatGPT-யை அடிக்கடி பயன்படுத்தும் பயனாளர்களில், மூளை செயல்பாடு 55% வரை குறைவாக இருந்ததோடு, நினைவக திறனும் குன்றியதுள்ளது என்பதை சுட்டிக்காட்டினார். 

AI கருவிகள் வசதியை அதிகரிக்கும் அதே வேளையில், அறிவாற்றல் தேவைப்படும் பணிகளில் சாட் ஜிபிடியை அதிகம் பயன்படுத்துவது, சிந்தனையை மந்தமாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன எனத் தெரிவிக்கிறார். இத்தகைய சூழலில்தன் OpenAI தலைமை நிர்வாக அதிகாரியான சாம் ஆல்ட்மேன், ChatGPT பயனார்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார். The ChatGPT Podcastல் பேசிய சாம் ஆல்ட்மேன், சாட் ஜிபிடி மீதான மக்களின் நம்பகத்தன்மை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார். 

அதேவேளையில் இது வெறும் தொழில்நுட்பம் தான் என்பதால் முழுமையாக நம்பத் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1753047536.jpg



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
Attachments area