கனடாவில் சொகுசு கப்பலில் இருந்து விழுந்த 42 வயது பெண்

கனடாவின் நொவா ஸ்கோஷியா மற்றும் நியூஃபவுண்லாந்த் & லாப்ரடார் மாகாணங்களுக்கு இடையில் கப்பலில் பயணித்த ஒரு பெண் கடலில் விழுந்திருப்பதாக சந்தேகிக்கப்பட்டு, மீட்புக் குழுக்களால் தீவிரமாக தேடப்படுகின்றார்.
காணாமல் போனவர் 41 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மரீன் அட்லாண்டிக் புளு புடீஸ் கப்பலின் ஊடான கடல் பயணத்தின் போது கடைசியாக காணப்பட்டுள்ளார்.
அந்தப் கப்பல் North Sydney இருந்து Port aux Basques நோக்கி பயணித்தது. ஹலிஃபேக்சில் உள்ள இணைந்த மீட்புப் பிரிவு மையத்தினைச் சேர்ந்த லெப்டினன்ட் கமாண்டர் லென் ஹிக்கி தெரிவித்ததின்படி, பெண் கப்பலில் இருந்து கடலில் விழுந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
மீட்பு பணிகளில் விமானம், ஹெலிகாப்டர், மற்றும் ஒரு குடிமை விமானம் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கடலில் உள்ள கடலோர காவல் கப்பலும் கப்பல் சென்ற பாதையை மீண்டும் கடந்து தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை




