நிமிஷா பிரியாவிற்கு மரண தண்டனை வழங்கியே தீர வேண்டும்! சகோதரர் உறுதி

கேரளாவை சேர்ந்த நிமிஷா பிரியா என்ற நர்ஸ், ஏமன் நாட்டில் ஒருவரை கொலை செய்த வழக்கில் மரண தண்டனை பெற்ற நிலையில், தற்போது "இரத்தப் பணம்" என்ற பேச்சுவார்த்தை காரணமாக மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நிமிஷாவால் கொலை செய்யப்பட்டவரின் சகோதரர், கொலையாளியை மன்னிக்க முடியாது என்றும், இரத்த பணம் தங்களுக்கு வேண்டாம் என்றும், அவருக்கு மரண தண்டனை வழங்கியே தீர வேண்டும் என்று உறுதியாக கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு, கேரள நர்ஸ் நிமிஷா பிரியா என்பவரால் மெஹந்தி என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இது குறித்த வழக்கில் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று இந்தத் தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. ஆனால், இந்திய மற்றும் ஏமன் நாட்டின் மத குருமார்கள் பேச்சுவார்த்தை நடத்தியதால், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
நிமிஷா குடும்பத்தினர் இரத்தப் பணம் கொடுக்கத் தயாராக இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அந்தப் பணத்தை மெஹந்தி குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டால் மரண தண்டனை இரத்துச் செய்யப்படும் என்று கூறப்பட்டது.
இதற்கான கலந்துரையாடல் நடந்து கொண்டிருக்கும் நிலையில், மெஹந்தியின் சகோதரர், "நிமிஷாவை மன்னிக்க முடியாது என்றும், அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், தங்களுக்கு இரத்தப் பணம் தேவையில்லை" என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



