பரீட்சை அடிப்படையிலான கல்வி மதிப்பீடு முறையை மாற்ற வேண்டும் – பிரதமர் ஹரினி
#SriLanka
#Minister
#education
Soruban
4 months ago
பரீட்சை பெறுபேறுகள் மூலம் மட்டும் கல்வியின் தரத்தை அளவிடும் தற்போதைய நடைமுறை மிகவும் தவறானது என பிரதமர் ஹரினி தெரிவித்துள்ளார். மாணவர்களின் திறமை, சிந்தனைத் திறன், சுயமாக கற்றுக்கொள்ளும் சக்தி ஆகியவை பரீட்சை மதிப்பெண்கள் மூலம் முழுமையாக மதிப்பீடு செய்யப்பட முடியாது என்பதால், புதிய கல்வி மதிப்பீட்டு முறைமைகள் தேவைப்படுகின்றன என்று அவர் வலியுறுத்தினார்.
இவ்விடயம் தொடர்பாக விரைவில் ஆலோசனை நடத்தப்படும் என்றும், மாணவர்களின் பல்துறை திறன்களை முன்னிறுத்தும் கல்வி முறைமைக்கு அரசாங்கம் முழு ஆதரவையும் வழங்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.