அடுத்த வருடத்திற்குள் அனைத்து பாடசாலைகளுக்கும் இணைய வசதிகள்! பிரதமர்

2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து சிரேஷ்ட பாடசாலைகளுக்கும் இணைய வசதிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று (09) பாராளுமன்ற விவாதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
1000 பாடசாலைகளுக்கு பிற தகவல் தொழில்நுட்ப உபகரணங்களை வழங்க முன்மொழியப்பட்டுள்ளது. இதற்காக அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டுள்ளது.
இதுவரை, 1500 பாடசாலைகளுக்கு 1900 ஸ்மார்ட் போர்டுகள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கல்வித் துறையின் அனைத்து நிலைகளையும் உள்ளடக்கிய ஒரு தேசிய கல்வி மேலாண்மை அமைப்பை உருவாக்குவதற்கான ஆரம்பப் பணிகளும், தூய்மை இலங்கை திட்டத்தின் கீழ் இலங்கை விமானப்படையின் தொழில்நுட்ப உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து இடைநிலைப் பாடசாலைகளுக்கும் இணைய வசதிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாடசாலைகளுக்கு 5,000 ரூபா வரம்பற்ற தரவு தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



