பிரான்ஸ் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

#PrimeMinister #France #Vote #confidence
Prasu
1 year ago
பிரான்ஸ் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

ஓய்வூதியம் தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, பிரான்சின் Socialist கட்சியினர் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளார்கள்.

ஓய்வூதியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், பிரான்ஸ் பிரதமர் Francois Bayrou, Socialist கட்சியால் மற்றொரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள நேரிடும் என சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

தீவிர வலதுசாரி கட்சியான National Rally கட்சி இந்த தீர்மானத்தை ஆதரிக்கப் போவதில்லை என்று கூறியிருந்தாலும், இந்த நடவடிக்கை ஏற்கனவே வலிமையற்று காணப்படும் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானின் அரசை மேலும் பலவீனப்படுத்துவதாக கருதப்படுகிறது.

ஓய்வூதிய அமைப்பில் சீர்திருத்தங்கள் கொண்டுவருவது தொடர்பாக பிரான்ஸ் தொழிற்சங்கங்களுக்கும் பணி வழங்குவோருக்கும் இடையே பல மாதங்களாக நடந்து வந்த பேச்சுவார்த்தைகள் திங்கட்கிழமை தோல்வியில் முடிந்தன.

ஆகவே, ஓய்வூதிய வயதை மீண்டும் குறைப்பது உட்பட சீர்திருத்தத்தில் மாற்றங்களை முன்மொழிய நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுமதிக்க வேண்டும் என்று Socialist கட்சியினர் கோரினர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1750925730.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4