கனகேந்திரம் குடியிருப்பு பெயர் பலகை திரைநீக்கம்!

#SriLanka #Kilinochchi #ADDA #ADDAFLY #ADDAPOOJA
Dhushanthini K
2 months ago
கனகேந்திரம்  குடியிருப்பு பெயர் பலகை திரைநீக்கம்!

கிளிநொச்சி அம்பாள் குளம் கிராமசேவகர் பிரிவில், முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் கனகேந்திரம் குடியிருப்பு பெயர்பலகை திரைநீக்கம் செய்யும் நிகழ்வு இன்று (25.06.2025) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கிளிநொச்சி கரைச்சி பிரதேசபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாளிதன், ஓய்வுநிலை அதிபர் கனகரத்தினம், மற்றும் பிரதேசத்தின் முக்கிய சமூக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். 

சமூக சேவகராக திகழ்ந்த திரு. கனகேந்திரம் என்பருடைய காணியே இவ்வாறு மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. கனகேந்திரம் என்பவர் கிளிநொச்சியின் மூத்த குடியேற்ற கிராமமான கனகபுரத்தின் ஒரு மூத்த பிரஜை தான் வாழ்ந்த காலங்களிலே தனது கனகபுரம் கிராமத்தில் இருக்கக்கூடிய கல்வி வசதியற்ற மாணவர்களுக்கு இலவச கல்வியை பெற்றுக் கொடுப்பதிலும் பொருளாதார வசதிகளில் பின்னடைவாக இருந்த குடும்பங்களுக்கு விவசாயம் உட்பட வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் ஒரு முன்னோடி மிக்க மனிதராக செயல்பட்ட ஒருவராக இருந்தார்.

அக்கால பகுதியிலே இந்த சமூகத்திலே தாடி கனகேந்திரம் ஐயா என்றால் அவர் அனைவராலும் அறியப்பட்ட ஒரு சமூக சேவகராக இனம் காணப்பட்டிருந்தார்.

அவரது செயற்பாடுகள் காரணமாக கல்வியில் மேம்பட்ட பலர் இன்று வைத்தியத்துறையிலும் பொறியியல் துறையிலும் உட்பட பல்வேறு சமூகமட்ட அந்தஸ்துகளிலே மிகவும் உயர்ந்த நிலைகளிலே காணப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கனகபுரம் கிராமத்தில் இவர் குடியிருந்தாலும் இவரது அயல் கிராமமான அம்பாள் குளத்திலும் இவருக்கு ஒரு தொகுதி காணி இருந்தது. அவரது இறப்பிற்கு பின்னராக அந்த காணியை அவரது மகன் இளவழகன் காணியற்றோரை அடையாளம் கண்டு அவர்களுக்கு இலவசமாக தனது தந்தையாருடைய காணியை பகிர்ந்து அளித்து தந்தையாருடைய எண்ணத்துக்கு அமைவாக தானமாக வழங்கியுள்ளார். ஒரு சமூகப் பணியின் அடையாளமாக அந்த காணிகளை பகிர்ந்து அளித்து அதற்கு கனகேந்திரம் குடியிருப்பு என்ற பெயரினை பலரது ஆலோசனைக்கு அமைவாகவும் ஏற்படுத்தி இருந்தார். 

இந்த குடியிருப்பில் பல குடும்பங்கள் இன்று வீடுகளை அமைத்து மிகவும் மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையிலே இந்த கனகேந்திரம் குடியிருப்பு என்பது இந்த கிராமத்தினுடைய ஒரு முக்கிய அடையாளமாக திகழ்ந்து இருக்கிறது என்பது தொடர்பிலே பலரும் தமது மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!