கிளிநொச்சியில் தரிசாக கிடக்கும் நிலங்களை விளைநிலங்களாக மாற்ற சோதிடர் சுதாகர் கோரிக்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும் போகத்தில்(காலபோகத்தில்) சுமார் 76000 ஏக்கரும், சிறப்பாக மழை பெய்து குளங்கள் நிறைந்தால் சிறு போகத்தில் வெறும் 30,000 ஏக்கர் மட்டுமே பயிர் செய்யப்படுகிறது.
இதனால் சராசரியாக 46,000 ஏக்கர் நெல் வயல்கள் தரிசாக பயன்படுத்த முடியாத நிலைமையில் உள்ளது. கிளிநொச்சி, மன்னார் கட்டுக்கரைக் குளம், முல்லைத்தீவு என இந்த மூன்று இடங்களையும் சேர்த்துக் கணக்குப் பார்த்தால் சிறுபோகத்தில் நீரில்லாமல், செய்கை பண்ணப்படாமல் தரிசாக இருக்கின்ற நிலங்கள் குறைந்தபட்சம் ஒரு லட்சத்தைத் தாண்டுகிறது.
இந்த ஒரு லட்சம் ஏக்கரிலும் விளையக்கூடிய நெல்லானது சராசரியாக ஏக்கருக்கு 30 மூடை என்று கணக்குப் பார்த்தால் கூட அண்ணளவாக நாம் ஒவ்வொரு ஆண்டும் இழக்கின்ற மொத்த நெல்மூட்டைகளின் உற்பத்தி 30’00’000 (ஒரு போகத்தில் மட்டும்).
30’00’000x75 Kg1/1000= 225 000 மெட்ரிக் தொன். ஒரு கிலோ நெல் உற்பத்திக்கு சராசரி 7500 லீட்டர் தண்ணீர் தேவை. இதற்க்கு தேவையான நீரின் மொத்த அளவு 16875 00 000 000 லீட்டர் தண்ணீர் மேலதிகமாகத் தேவை.
இவ்வளவு நீரை எவ்வளவு மழை பெய்தாலும் எம்மால் பெற்றுக்கொள்ள முடியாது அல்லது சேமிக்க முடியாது ஆகவே இதை நாம் பெறுவதற்கான வழியை தேடி எமது தரிசாக கிடக்கும் நிலங்களையும் விளைநிலங்களாக மாற்ற வேண்டும்.
இதற்கெல்லாம் தீர்வு என்ன? இங்கேதான் நாம் சரியாகச் சிந்தித்து நமக்கான நீர் வளத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
செய்தி ஆக்கம்:-
சோதிடர் சுதாகர். SWISS
(வீடியோ இங்கே )



