சாவகச்சேரி பிரதேச சபை தமிழரசுக் கட்சி வசம்!

#SriLanka #Jaffna #Lanka4 #Chavakachcheri #SHELVAFLY
Mayoorikka
2 months ago
சாவகச்சேரி பிரதேச சபை தமிழரசுக் கட்சி வசம்!

சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் பொன்னையா குகதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவு, சாவகச்சேரி பிரதேச சபை சபா மண்டபத்தில் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நேற்று(23) நடைபெற்றது. தவிசாளர் பதவிக்காக இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் பொன்னையா குகதாசனும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் செல்வரத்தினம் மயூரனும் போட்டியிட்டனர். 

 போட்டியிட்ட இருவரும் சரிசமமாக 10 வாக்குகளைப் பெற்றதால் திருவுளச்சீட்டு மூலம் தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. அதில் தவிசாளராக இலங்கைத் தமிழரசுக்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பொன்னையா குகதாசன் தெரிவானார். உப தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் போட்டியிட்ட இராமநாதன் யோகேஸ்வரன் தெரிவானார். 

 இதன் மூலம் சாவகச்சேரி பிரதேசசபை ஆட்சியை இலங்கைத் தமிழரசுக்கட்சி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)


(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1750630849.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!