கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு : இஷாரா செவ்வந்தி தொடர்பில் வெளியான அறிவிப்பு!
#SriLanka
#ADDA
#Kanemulla Sanjeeva
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
2 months ago

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இஷார செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இந்தக் கொலை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை முறையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறுகிறார்.
தொலைகாட்சிக்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் பங்கேற்று உரையாற்றிய அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், "எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாகத் தெரியவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக இந்த சந்தேக நபரிடம் இருந்த அனைத்து தகவல்களும் மற்ற சந்தேக நபர்கள் மூலம் வெளியாகியுள்ளன.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



