கனடாவில் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்

#Canada #Accident #Helicopter #Missing
Prasu
2 months ago
கனடாவில் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்

கனடாவின் க்யூபெக்கின் வடகிழக்கு பகுதியில் உள்ள நடாஷ்குவான் பகுதியில், மருத்துவ அவசர போக்குவரத்துக்காக பறந்த எயர் மெடிக் ஹெலிகாப்டர் ஒன்று ஏரியில் விழுந்துள்ளது. இந்த ஹெலிகொப்டரில் பயணம் செய்த நால்வர் காணாமல் போயுள்ளனர். 

ஹெலிகொப்டர் ஒருவரை மருத்துவ அவசர நிலை காரணமாக ஏற்றிக்கொண்டு புறப்பட்டிருந்தபோது, புறப்பட்ட சில நிமிடங்களில் ஏரியில் விழுந்ததாக TSB கூறியுள்ளது.

ஹெலிகாப்டரில் நான்கு ஊழியர்களும், ஒரு பயணியும் இருந்ததாக எயர் மெடிக் நிறுவனத்தின் பேச்சாளர் ரபாயல் போர்கால்ட் தெரிவித்தார். 

விபத்துக்குள்ளானவர்களில் ஒருவர் மீட்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தில்லை என கூறப்படும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் ஏனைய நான்கு பேரைக் காணவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1750577284.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!