முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மனைவி மகள் கைது!
#SriLanka
#Arrest
#Lanka4
#KehaliyaRambukwella
Mayoorikka
3 months ago

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல , லஞ்ச ஒழிப்பு ஆணையகத்தின் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இன்று(18) காலை முன்னிலையாகியிருந்தார்.
இதன்போது கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் சற்றுமுன்னர் அவரும் அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மூன்று சந்தேக நபர்களும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



