பருத்தித்துறை நகரசபையின் தவிசாளராக டக்ளஸ் போல் தெரிவு!

#SriLanka #Jaffna #Point-Pedro #Lanka4
Mayoorikka
3 months ago
பருத்தித்துறை நகரசபையின் தவிசாளராக டக்ளஸ் போல் தெரிவு!

பகிரங்க வாக்கெடுப்பு நடாத்தப்பட்டதில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் வின்சன் டீபோல் டக்ளஸ் போல் 7/4 என்ற வாக்குகளில் வெற்றிபெற்றுள்ளார்.

 இலங்கை தமிழரசு கட்சி சார்பில் தி.சந்திரசேகர், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் வின்சன் டிபோல் டக்ளஸ்போல் ஆகிய இருவர் முன்மொழியப்பட்டிருந்தனர்.

 ஜீவநந்தினி பாபு தலைமையில் இடம் பெற்ற வாக்கெடுப்பில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி வெளிநடப்பு செய்தது. மூன்று உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர். அதனை தொடர்ந்து உப தவிசாளர் தெரிவு இடம் பெற்றது.

 இதில் 7/3 என்ற அடிப்படையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் தேவசிகாமணி தேவராசேந்திரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் இதில் பருத்தித்துறை நகரசபை செயலாளர், தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சி யாழ்மாவட்ட தலைவர் ஆ.சுரேஸ்குமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1749803680.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!