சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரி கீதா கோபிநாத் பிரதமரை சந்தித்தார்!

#SriLanka #PrimeMinister #Lanka4 #IMF
Mayoorikka
3 months ago
சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரி கீதா கோபிநாத் பிரதமரை சந்தித்தார்!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் பிரதமர் ஹரிணி அமர் சூரியவை நேற்று அலரி மாளிகையில் சந்திதுள்ளார்.

 பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட பின்னர் பொருளாதாரம் மீட்சிப் பாதையில் செல்லும்போது, சர்வதேச பங்குதாரர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கான இலங்கையின் வலுவான உறுதிப்பாட்டை பிரதமர் இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

 கடன் மறுசீரமைப்புக்கான அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையுடனான மற்றும் செயற்திறமான அணுகுமுறையை கோபிநாத் பாராட்டியதுடன், இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் அரசாங்கத்தின் முயற்சிகளில் சர்வதேச நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதார சீர்திருத்த சட்டகம், இலங்கையை போலவே நிதி மற்றும் கட்டமைப்பு சவால்களை எதிர்கொள்ளும் ஏனைய நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக அமைகிறது என்றும் கலாநிதி கோபிநாத் குறிப்பிட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1749803680.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!