அகமதாபாத் விமான விபத்து - கனடிய பெண் பல் மருத்துவர் மரணம்

#India #Death #Flight #Canada #Accident #Women #doctor
Prasu
2 months ago
அகமதாபாத் விமான விபத்து - கனடிய பெண் பல் மருத்துவர் மரணம்

இந்தியாவிற்கான பயணமொன்றை முடித்துவிட்டு டொரோண்டோவுக்குத் திரும்பிக் கொண்டிருந்த தருணத்தில், கனடிய பெண் டாக்டர் நிராலி படேல் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

லண்டனை நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம், இந்தியாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஒரு கல்லூரி மாணவர் விடுதியில் மோதி விழுந்தது.

இதில் விமானத்தில் பயணம் செய்த 241 பேரும் உயிரிழந்தனர். தரையிலிருந்தவர்களில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது இன்னும் தெளிவாகவில்லை.

32 வயதான நிராலி படேல், எடோபிகோவ் பகுதியைச் சேர்ந்த பல் மருத்துவர் ஆவார். நிராலி அந்த விமானத்தில் இருந்த ஒரே கனடா நாட்டவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நிராலி இந்தியாவிற்கு நான்கு அல்லது ஐந்து நாட்கள் சென்றிருந்தார் எனவும் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நிராலியின் கணவர், தங்களது ஒரு வயது குழந்தையுடன் இந்தியா செல்ல விமானப் பயணத்தை ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாகக தெரிவிக்கப்படுகின்றது. நிராலி படேல், மிசிசாகாவில் உள்ள ஒரு பல் மருத்துவ நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1749800081.jpg
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!