ஒப்பந்தம் செய்ததை தவிர அனைத்து சபைகளிலும் தமிழரசு போட்டியிடும்!
#SriLanka
#M. A. Sumanthiran
#Lanka4
#IlankaThamilarasukKadsi
Mayoorikka
3 months ago

நிர்வாகங்களைப் பகிர்ந்து கொள்வது சம்பந்தமாக சில கட்சிகளோடு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகள் தவிர்ந்த மற்றைய சபைகள் அனைத்திலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி மேயர், தவிசாளர் பதவிகளுக்கு வேட்பாளர்களை முன்மொழியும்."என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் நேற்று இரவு இணைய வழியில் நடைபெற்றது.
இதன்போது உள்ளூராட்சி சபைகளில் நிர்வாகங்களை அமைப்பது சம்பந்தமாக ஆராயப்பட்டு மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது என்று தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



