கொரோனா தொற்றாளர்களை அடையாளங் காண திட்டம் இல்லை!
#Corona Virus
#SriLanka
#Covid 19
#Lanka4
Mayoorikka
3 months ago

கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளங் காண்பதற்கான முறையானதொரு திட்டம் இதுவரையிலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் குற்றஞ்சுமத்துகிறது.
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவும் விகிதம் அதிகரித்துள்ள நிலையில், அங்கிருந்து நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, டெங்கு, சிக்குன்குன்யா, இன்புளுவென்சா மற்றும் கொரோனா வைரஸ் தொற்று அபாயங்கள் குறித்து சுகாதாரத்துறை உரிய கவனம் செலுத்தி வருவதாகச் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



