தமிழ் தேசிய பேரவை- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து
#SriLanka
#Tamil People
#Gajendrakumar Ponnambalam
#Lanka4
Mayoorikka
3 months ago

தமிழ் தேசிய பேரவையும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இடையில் கூட்டணி அமைப்பதற்கான ஒப்பந்தம் சற்றுமுன்னர் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு யாழிலுள்ள பிரபல தனியார் விடுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்றது. உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசிய பேரவையும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் பெற்றுக் கொண்ட ஆசனங்களை கொண்டு சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக நேற்றிரவு இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினையடுத்தே இன்றையதினம் கொள்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் முக்கியஸ்தர்கள், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



