ஊடகவியலாளர் நடேசனுக்கு ஊடகத்தினர் அஞ்சலி
#SriLanka
#Lanka4
#Journalist
#SHELVAFLY
Mayoorikka
3 months ago

துணை ஆயுதக்குழுவினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் (31) சனிக்கிழமை யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறையில் அமைந்துள்ள யாழ் வடமராட்சி ஊடக இல்ல அலுவலகத்தில் இன்று மாலை 4.00 மணியளவில் இடம்பெற்ற நிகழ்வில், சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி, சுடரேற்றி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ் வடமராட்சி ஊடக இல்ல தலைவர் கு.மகாலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந் நினைவேந்தரில் ஊடக இல்லத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



