வயம்ப கல்வியியற் கல்லூரி மாணவி உயிர்மாய்ப்பு! விசாரணைக்குழு நியமிப்பு

#SriLanka #Lanka4
Mayoorikka
3 months ago
வயம்ப கல்வியியற் கல்லூரி மாணவி உயிர்மாய்ப்பு! விசாரணைக்குழு நியமிப்பு

வயம்ப தேசிய கல்வியியற் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்துவதற்காக விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

 உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் அதுதொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 அந்த அறிக்கையில், இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரியின் முதல்வரிடமிருந்து விரிவான அறிக்கை ஒன்று பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் சம்பவ இடத்தில் விசாரணை ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 இதற்கிடையில், அனைத்து தேசிய கல்வியியற் கல்லூரி முறைமையின் நிர்வாக மற்றும் கல்வி நடவடிக்கைகளை மறு ஆய்வு செய்து, தேவையான மாற்றங்களை உடனடியாக மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1748040119.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!