கனடாவில் துப்பாக்கி சூடு - இருவர் மருத்துவமனையில் அனுமதி

#Arrest #Canada #Hospital #GunShoot
Prasu
1 month ago
கனடாவில் துப்பாக்கி சூடு - இருவர் மருத்துவமனையில் அனுமதி

கனடாவின், ஓஷாவாவில் புதன்கிழமை இரவு நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என டர்ஹாம் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.

ஜான் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் சிம்கோ ஸ்ட்ரீட் சவுத் சாலைகள் சந்திக்கும் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஒருவரை கண்டுபிடித்து, உடனடியாக டொரண்டோ பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அவரின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, மற்றொரு காயமடைந்த நபர் தன்னிச்சையாக மருத்துவமனைக்கு சென்றதாகவும், அவரும் உயிருக்கு ஆபத்தில்லாத நிலையில் உள்ளதாகவும் காவல்துறை கூறியுள்ளது.

காயமடைந்தவர்களில் ஒருவர் இளம் வயதுடையவர் என்றும் மற்றவர் வயது வந்தவர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளதாகவும், பொதுமக்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லையென்றும் அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான சூழ்நிலைகள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகவில்லை. காவல்துறை விசாரணை தொடர்கிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1747294410.jpg
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!