கனடாவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு

#Canada #prices #Food
Prasu
6 hours ago
கனடாவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு

கனடாவில் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள் ஏற்கனவே அதிகமாக உள்ள நிலையில், அவை மேலும் அதிகரிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவில், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பால், வெண்ணெய் மற்றும் மாட்டிறைச்சி போன்ற உணவுப்பொருகளின் விலைகள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. 

பால், இரண்டு லிற்றர் கார்ட்டன் விலை 5.35 டொலர்களாகவும், வெண்ணெய் 454 கிராம் பேக்கின் விலை 5.64 டொலர்களாகவும் உள்ளது.

இந்நிலையில், உணவுப்பொருட்கள் விலை மேலும் 3 முதல் 5 சதவிகிதம் வரை அதிகரிக்கக்கூடும் என 2025ஆம் ஆண்டுக்கான கனடா உணவு விலை அறிக்கை தெரிவிக்கிறது.

அதாவது, ஒரு சராசரி கனேடியக் குடும்பத்தின் மளிகைப்பொருட்களுக்கான செலவு, இந்த ஆண்டில் சுமார் 800 டொலர்கள் வரை எட்ட உள்ளது. இந்த விலை உயர்வால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது, குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்கள்தான். 

ஏற்கனவே பல குடும்பங்கள் உணவு வங்கிகளை நாடிவருகின்றன. ஆரோக்கியம் எல்லாம் பார்க்காமல், குறைந்த விலையில் உணவுப்பொருட்கள் கிடைக்குமா என அந்தக் குடும்பங்கள் தேடத் துவங்கியுள்ளன. கனேடிய மக்களின் இந்த நிலைக்கு ட்ரம்பின் முரட்டுத்தனமான வர்த்தக அணுகுமுறையும் ஒரு காரணம்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1747121873.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!