டொரண்டோவுக்கு வந்த ஏர் கனடா விமானத்தில் தட்டம்மை நோயாளி

#Flight #Canada #Disease #Passenger
Prasu
3 hours ago
டொரண்டோவுக்கு வந்த ஏர் கனடா விமானத்தில் தட்டம்மை நோயாளி

டொரண்டோவுக்கு வந்த ஏர் கனடா விமானத்தில் ஒரு தட்டம்மை நோயாளி கண்டறியப்பட்டதைக் கருத்தில் கொண்டு, பீல் பொது சுகாதாரத்துறை (PPH)விசாரணை நடத்தி வருகிறது.

இதன் மூலம், இந்த ஆண்டில் அந்த பகுதியில் உறுதிப்படுத்தப்பட்ட தட்டம்மை நோயாளிகளின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது.

கடந்த 3ஆம் திகதி சீடலிலிருந்து டொரண்டோவுக்கு வந்த ஏர் கனடா விமானம் AC540-ல் பயணித்தவர்கள், அல்லது அதே நாளில் இரவு 7:30 மணிக்குத் தொடங்கி 10 மணிவரை டொரண்டோ பியர்சன் விமான நிலையத்தின் டெர்மினல் 1 பகுதியில் இருந்தவர்கள் தொற்றுக்கு உள்ளானவருடன் தொடர்புபட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

தாங்கள் நோயாளியுடன் நேரடியாக தொடர்பிலிருந்திருக்கலாம் என சந்தேகமுள்ளவர்கள், தங்களுடைய தடுப்பூசி பதிவுகளை சரிபார்த்து, தட்டம்மை நோய்த் தடுப்புக்குத் தேவையான தடுப்பூசி பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என பியர்சன் பொதுச் சுகாதார சேவை வலியுறுத்துகிறது.

அறிகுறிகள் உள்ளவர்களுக்கு உடனடி மருத்துவ ஆலோசனை தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது. உயர் காய்ச்சல், இருமல், கண்ணீர் வடிதல், போன்ற தட்டம்மை அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளது.

ஏற்கனவே தட்டம்மை நோயினால் பாதிக்கப்படாதவர்கள் மிகவும் எளிதில் இதில் சிக்கக்கூடும்,” என பீல் பிராந்திய பொதுச் சுகாதார அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1746688334.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!