ஜேர்மனியில் இருந்து பிரான்சுக்கு அழைத்துவரப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர்
#Arrest
#France
#drugs
#Germany
#deports
Prasu
1 month ago

போதைப்பொருள் கடத்தல்காரரான முகமட் அம்ரா சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற வழக்கில் தொடர்புடைய ஒரு முக்கிய குற்றவாளி ஜேர்மனியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவர் மேலதிக விசாரணைகளுக்காக பரிசுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். குறித்த நபர் பிரான்சிடம் கையளிக்கப்பட்டார்.
Oltjon O எனும் குறித்த நபர் முகமட் அம்ரா தப்பிச் சென்ற வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியாவார். அம்ரா பிரான்சில் இருந்து ஜேர்மனி வழியாக ஒஸ்ரியா, ஸ்லோவாகியா போன்ற நாடுகள் வழியாக தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்தார்.
இந்நிலையில், அவர் கைது செய்யப்பட்டு, பிரான்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அம்ரா தப்பிச் சென்ற வழக்கில் மட்டும் இதுவரை 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



