பிரான்சில் மணற்புயல் எச்சரிக்கை விடுப்பு
#France
#Warning
#Strom
Prasu
6 months ago
சஹாரா பாலைவனத்தில் இருந்து புறப்படும் புயல் பிரான்சின் பல பகுதிகளில் தாக்கிவருவதாக வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.
வழிமண்டலத்தில் மெல்லிய மணற் துகள் கலந்திருக்கும் எனவும், சுவாசப்பிரச்சனை, கண் எரிவு போன்ற வியாதிகள் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
வாகனங்களிலும், வீடுகளில் மணற்துகள் பதியும் எனவும், இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்கும்படியும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மே 1, வியாழக்கிழமை முதல் இந்த மணற்புயல் வீசி வருவதாகவும், இந்த வார இறுதி நாட்களில் அதன் தாக்கம் அதிகமாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
