பாரிஸில் மே தின பேரணியில் பங்கேற்ற 8 பேர் கைது

#Arrest #Protest #Weapons #drugs #Paris
Prasu
4 hours ago
பாரிஸில் மே தின பேரணியில் பங்கேற்ற 8 பேர் கைது

மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பாரிஸ் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் 1 லட்சம் முதல் 1.5 லட்சம் பேர்வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எட்டு பேர் தடைசெய்யப்பட்ட ஆயுதம் வைத்திருத்தல், வன்முறை சதி, போதைப்பொருள் வைத்திருத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக கைது செய்யப்பட்டனர். 

LFI தலைவர் ஜான்-லூக் மெலன்ஷோன், “60 வயதில் ஓய்வூதியம், 8 மணி நேர வேலை மற்றும் வாரத்திற்கு 35 மணி நேர வேலை” உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மீட்கப்படும் வரை போராட்டம் தொடரும் என கூறியுள்ளார்.

Dunkerque பகுதியில் ArcelorMittal நிறுவனத்தின் வேலைவாய்ப்பை குறைக்கும் திட்டத்திற்கு எதிராக இடதுசாரி தலைவர்கள் பெரிய அளவில் ஆதரவு தெரிவித்தனர். 

CGT, Solidaires, FSU உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சமூக நலன், ஊதியம், ஓய்வூதியம், பாலஸ்தீனுக்கு ஆதரவு மற்றும் முஸ்லிம் மீதான பாகுபாடுகளுக்கு எதிரான கோரிக்கைகளுடன் மக்கள் ஒன்றுபட்டு போராடினார்கள். 

250க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டங்களில் சில இடங்களில் வன்முறைகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக காவல்துறையும் எச்சரித்துள்ளது.


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1746122869.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!