கனடாவில் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள் - 7 பேர் கைது

கனடாவின், யோர்க் பிராந்தியத்தில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யோர்க் காவல்துறை நடத்திய சிறப்புப் படை ஒழுங்குபடுத்தப்பட்ட திருட்டு நடவடிக்கைகளை குறிவைத்து மேற்கொண்ட விசாரணையின் போது, சுமார் மூன்று மில்லியன் டொலர் பெறுமதியான கட்டிடப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில், யோர்க் பிராந்தியம் மற்றும் டொராண்டோ பெரும்பாக பகுதியில் உயர் தர கட்டடப் பொருட்கள் இயந்திர சாதனங்கள் களவாடப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, டொராண்டோவிலுள்ள வீடு மற்றும் பல்வேறு சேமிப்புக் கூடங்களில் வழிகாட்டப்பட்ட விசாரணைகளின் மூலம் சுமார் மூன்று மில்லியன் டொலருககும் மேற்பட்ட சொத்துகள் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையினர் கூறுகையில், மேலும் சந்தேகத்திற்குரிய நபர்கள் அடையாளம் காணப்படும் வாய்ப்பும், மேலும் திருடப்பட்ட சொத்துக்கள் மீட்கப்படலாம் எனவும் கூறினர்.
தொடர்புடைய புகைப்படங்கள் மற்றும் மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



