கனடாவில் காணாமல் போன பஞ்சாப் மாணவி உயிரிழப்பு

#Death #Student #Canada #Women #Punjab
Prasu
3 hours ago
கனடாவில் காணாமல் போன பஞ்சாப் மாணவி உயிரிழப்பு

பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டம் டிராபாசி பகுதியை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி தேவேந்தர் சிங். இவரது மகள் வன்ஷிகா (வயது 21).

கடந்த 2 ஆண்டுகளுக்குமுன் கனடா சென்ற வன்ஷிகா ஒட்டாவாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்தார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி மாலை வன்ஷிகா தான் தங்கி இருந்த வீட்டில் இருந்து வெளியே சென்றார். 

வாடகைக்கு வேறு வீடு பார்க்க செல்வதாக அங்கு தங்கியிருந்த சக மாணவிகளிடம் கூறிவிட்டு வன்ஷிகா சென்றுள்ளார். இரவு நீண்ட நேரமாகியும் வன்ஷிகா வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த சக மாணவிகள் போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, மாயமான வன்ஷிகாவை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். 4 நாட்களாக தேடப்பட்டு வந்த வன்ஷிகா சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வன்ஷிகாவின் உடல் அவர் தங்கி இருந்த வீட்டிற்கு அருகே கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளது. 

வன்ஷிகாவை யாரேனும் கொலை செய்தனரா? தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1746033468.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!