கனடாவில் மக்கள் கூட்டத்திற்குள் புகுந்த கார் - பலர் உயிரிழப்பு

#Death #Canada #Accident #people #Crowd
Prasu
3 days ago
கனடாவில் மக்கள் கூட்டத்திற்குள் புகுந்த கார் - பலர் உயிரிழப்பு

கனடாவில் வீதியில் இருந்த மக்கள் மீது வாகனம் மோதச் செய்யப்பட்டதனால் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

கனடாவின் வான்கூவார் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. லாபு லாபு தின நிகழ்வுகளுக்காக குழுமியிருந்த மக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும், பலர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் ஆள் அடையாள விபரங்கள் வெளியிடப்படவில்லை. பிலிப்பைன்ஸ் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் நிகழ்வு ஒன்றில் குழுமியிருந்த மக்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1745740144.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!