டொரண்டோ சிறைச்சாலையில் மோதல் - கைதி ஒருவர் மரணம்
#Death
#Canada
#Prison
#prisoner
#Fight
Prasu
4 weeks ago

டொரண்டோ தென் பகுதியில் அமைந்துள்ள தடுப்பு முகாமில் கடந்த வாரம் ஒரு கைதி மற்றொரு கைதியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.
தாக்குதலில் கடுமையான காயமடைந்த 27 வயது மங்கோக் அகோல் என்பவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், மூன்று நாட்கள் கழித்து உயிரிழந்தார் என பொலிசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், சந்தேகநபராக 32 வயதான ஆண்ட்ரே ஃபோர்டு அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபருக்கு எதிராக பொலிசார் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தி வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்த சம்பவம், இந்த ஆண்டு டொரண்டோவில் பதிவாகிய எட்டாவது கொலை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



