கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு : இஷார செவ்வந்தி சாயலில் இருக்கும் மற்றுமொரு பெண் அடையாளம்!

#SriLanka #Astrology #world_news #Court #lanka4news #Lanka4indianews #Kanemulla Sanjeeva
Thamilini
5 months ago
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு : இஷார செவ்வந்தி சாயலில் இருக்கும் மற்றுமொரு பெண் அடையாளம்!

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடையதாக தற்போது தலைமறைவாகியுள்ள இஷாரா செவ்வந்தி என்ற பெண் அனுராதபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் குறித்த பெண் அவரின் சாயலில் இருப்பதாகவும், அவரிடம் இருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். 

கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான இஷார செவ்வந்தி கைது செய்யப்படுவதற்கு வழிவகுக்கும் தகவல்களை வழங்குபவர்களுக்கு 1.2 மில்லியன் ரூபாய் பரிசு வழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. 

தகவல்களை வழங்கக்கூடிய தொலைபேசி எண்கள் வருமாறு, 

கொழும்பு குற்றப்பிரிவு இயக்குநர் - 071-8591727 

 கொழும்பு குற்றப்பிரிவு OIC - 071-8591735 

 தகவல்களை வழங்குபவர்களின் ரகசியத்தன்மையைப் பாதுகாக்க இலங்கை காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப்பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1743567289.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
autoplay