பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரை பகுதியில் கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள்
#SriLanka
#Arrest
#drugs
#Lanka4
#sri lanka tamil news
Prasu
3 months ago

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் 154 பொதிகளில் 300 கிலோகிராமுக்கும் அதிகமான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.
இராணுவப் புலனாய்வாளர்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இராணுவம், பொலிஸார் மற்றும் கடற்படையினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, மீன்பிடிப் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
நீண்ட நாட்களுக்குப் பின்னர் பெருந்தொகை கேரள கஞ்சா சிக்கியுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளைப் பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



