இலங்கை விமானப்படையின் ஜெட் விமானம் விபத்து..!

#SriLanka #Flight #Accident #Lanka4 #lanka4news
Mayoorikka
1 month ago
இலங்கை விமானப்படையின்   ஜெட் விமானம் விபத்து..!

இலங்கை விமானப் படையின் சீன K-8 பயிற்சி விமானம் சற்றுமுன்னர் வாரியப்போலாவில் விபத்துக்குள்ளானதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

 திருகோணமலையில் உள்ள சீன விரிகுடா விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட விமானம், விபத்துக்கு முன்னர் ரேடார் தொடர்பை இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 இது தொடர்பில் விமானப்படை கருத்து தெரிவிக்கையில், குறித்த விபத்தின் போது விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேறி பாராசூட்களைப் பயன்படுத்தி தரையிறங்கியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

 இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை,என்பதுடன் இந்த விபத்தில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. அதேவேளை குறித்த விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1742478079.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!