தேயிலை ஏற்றிச் சென்ற லொறி மீது மோதிய முச்சக்கர வண்டி : இரு பெண்கள் பலி!
#SriLanka
#Accident
#Badulla
Dhushanthini K
1 month ago

நெலுவ-பெலவத்த வீதியில் தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற லொறியுடன் முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் நெலுவ களுபோவிட்டியாவ பகுதியைச் சேர்ந்த 55 மற்றும் 27 வயதுடைய இரண்டு பெண்கள் ஆவர்.
நெலுவவிலிருந்து பெலவத்தை நோக்கிச் சென்ற லொறி, பெலவத்தையிலிருந்து நெலுவ நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி, ஹாத்தே கனுவா பகுதியில் நேருக்கு நேர் மோதியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் மீகஹதென்ன மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர், அங்கு இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
லொறி மற்றும் முச்சக்கர வண்டி பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளதுடன், தினியாவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை




