பிரான்சில் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்துகள் விபத்து - 36 பேர் காயம்
#France
#Accident
#Bus
#Military
Prasu
1 month ago

இராணுவ வீரர்களை ஏற்றிச்சென்ற நான்கு பேருந்துகள் விபத்துக்குள்ளானதில் 36 பேர் காயமடைந்துள்ளனர்.
A13 நெடுஞ்சாலையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இராணுவத்துக்குச் சொந்தமான நான்கு பேருந்துகளில், இராணுவ பயிற்சி மாணவர்கள் 120 பேர் பயணித்த நிலையில், பேருந்துகள் விபத்துக்குள்ளானது.
இதில் ஒருவர் படுகாயமடைந்து அவசரசிகிச்சைக்கு மாற்றப்பட்டனர். மேலும் 35 பேர் காயமடைந்த நிலையில், அவர்களுக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
விபத்து ஏற்பட்டமைக்குரிய காரணங்கள் அறிய முடியவில்லை. குறித்த இராணுவ பயிற்சி மாணவர்கள் Evreux நகரில் பயிற்சிகளை முடித்துக்கொண்டு பரிசுக்கு திரும்பும் வேளையில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



