மின்னேரியா தேசிய பூங்காவில் வாழ்ந்த யூனிகார்ன் என்ற யானை உயிரிழப்பு!
#SriLanka
#Elephant
Thamilini
8 months ago
மின்னேரியா தேசிய பூங்காவில் வாழ்ந்த யூனிகார்ன் என்ற யானை உயிரிழந்துள்ளது.
யானை சுடப்பட்ட பின்னர் இறந்துவிட்டது என்று சுற்றுச்சூழல் அமைச்சர் டாக்டர் தம்மிகா படபெண்டி தெரிவித்தார்.
இன்று (17) நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
சுட்டுக் கொல்லப்பட்ட யானையின் உடல் இன்று வனவிலங்கு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த 15 ஆம் திகதி யூனிகார்ன் என்ற யானை ஒரு குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அமைச்சர் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து வனப் பாதுகாப்புத் துறை விரிவான விசாரணையை நடத்தியுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் டாக்டர் தம்மிக படபெண்டி மேலும் தெரிவித்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
