அஞ்சல் துறையில் காலி இடங்கள் : 48 மணிநேர பணிபுறக்கணிப்பை அறிவித்த தொழிற்சங்கம்!
#SriLanka
#Job Vacancy
#strike
Dhushanthini K
3 months ago

அஞ்சல் துறையில் காலியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 7 பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்தத்தை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளன.
இதன்படி இன்று (16) மாலை 4 மணி முதல் 18 ஆம் தேதி வரை 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று ஐக்கிய அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் கூட்டு அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.
அஞ்சல் துறையில் சுமார் 7,500 ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், இதற்கு தீர்வு காணக் கோரி இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



