கனடாவில் இடம்பெற்ற தீ விபத்தில் தாய் மற்றும் 9 வயது மகள் மரணம்
#Death
#Canada
#Accident
#Women
#fire
Prasu
1 month ago

கனடாவின் ஒஷாவா நகரில் இன்று காலை இடம்பெற்ற பயங்கர தீ விபத்தில் தாய் ஒருவரும் அவரது 9 வயது மகளும் உயிரிழந்துள்ளனர்.
மிக்ரிகோர் வீதியில் உள்ள இரண்டடி மாடி வீட்டில் தீ பரவியது. தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த போது முழு வீடும் தீக்கிரையாக இருந்தது.
தீ விபத்து ஏற்பட்ட போது வீட்டில் நான்கு பேர் இருந்ததாகவும் இதில் இருவர் கொல்லப்பட்டதாகவும் 12 வயதான சிறுமியும் 56 வயதான நபரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தீப்பரவலுக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



