கனடாவில் 20 வயது யாழ்ப்பாண யுவதி ஒருவர் சுட்டுக்கொலை

#Death #Canada #Women #GunShoot #SriLankan
Prasu
1 month ago
கனடாவில் 20 வயது யாழ்ப்பாண யுவதி ஒருவர் சுட்டுக்கொலை

கனடாவின் மார்க்காமில் வசித்து வந்த 20 வயதுடைய யாழ்ப்பாண யுவதி ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தின் முன்னாள் நகரபிதா ஆல்பிரட் துரையப்பாவின் பேத்தி எனத் தெரிவிக்கப்படுகிறது. ரகுதாஸ் நிலாக்ஷி என்ற பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் கோண்டாவிலிருந்து கனடாவுக்குச் சென்ற இந்த பெண் இரண்டு வருடங்கள் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் அந்த வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் இந்த பெண்ணுடன் வசித்து வந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். துப்பாக்கிதாரிகள் வீட்டைக் காத்துக்கொண்டிருந்த நாயையும் சுட்டுக் கொன்றதாகக் தெரிவிக்கப்படுகிறது. 

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நால்வர் வாகனத்தில் தப்பிச் செல்வது சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளதாக கனேடிய காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். 

அதேவேளை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகளை மார்க்கம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1741678826.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!