புளி சாதம் - செய்முறை விளக்கம்!

#SriLanka #Cooking
Dhushanthini K
1 month ago
புளி சாதம் - செய்முறை விளக்கம்!

தேவையான பொருட்கள்:

 புளி - ஒரு எலுமிச்சை அளவு

 உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி

 கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி

 மிளகாய் வற்றல் - 6

 மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி

 தனியா தூள் - 1/2 தேக்கரண்டி

 பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி

 கடுகு - ஒரு தேக்கரண்டி

 சீரகம் - ஒரு தேக்கரண்டி

 கறிவேப்பிலை - தேவையான அளவு

 உப்பு - தேவையான அளவு

 அரிசி - 3 கப்

 தண்ணீர் - 6 கப்

 எண்ணெய் - 4 மேசைக்கரண்டி

 மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

 செய்முறை: புளியை தண்ணீர் விட்டு ஊற வைத்து கரைத்து வடிகட்டி வைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளிக்கவும். அதில் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல் போட்டு சிவந்ததும் பெருங்காயம் சேர்க்கவும். அடுப்பை சிறுந்தீயில் வைத்து மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், கறிவேப்பிலை சேர்த்து வாசம் போக வதக்கவும். பிறகு அதில் கரைத்த புளி தண்ணீர், உப்பு சேர்த்து கொதி வந்ததும் கழுவி ஊற வைத்த அரிசி சேர்த்து வழக்கமாக சாதம் போல் சமைக்கவும்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


images/content-image/1740924999.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!