வரவு செலவுத் திட்டம் - மூன்றாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் இன்று

#SriLanka #Parliament
Mayoorikka
2 months ago
வரவு செலவுத் திட்டம் - மூன்றாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் இன்று

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று இடம்பெறுகிறது. 

 பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சுக்கான செலவினத் தலைப்புகள் இன்று (28) குழு நிலை விவாதம் இடம்பெறுவுள்ளன.

 குழு நிலை விவாதம் நேற்று தொடங்கியது. இது எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நடைபெறும். இதேவேளை, நேற்று (27) நடைபெற்ற விவாதத்தின் போது உரையாற்றிய அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, கடந்த அரசாங்கங்களால் நியமிக்கப்பட்ட 14 ஜனாதிபதி ஆணைக்குழுக்களுக்கு 530 மில்லியனுக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். 

 இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதிகளின் பராமரிப்புச் செலவினங்களுக்காக மாத்திரம் 110 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். 

 முன்னாள் ஜனாதிபதிகள் ரணில் விக்ரமசிங்க மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் காலத்தில் ஆளும் கட்சி அமைப்பாளர்கள் 6 பேருக்கு மாத்திரம் 370 மில்லியன் ரூபாவுக்கு மேல் செலவிடப்பட்டதாகவும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1740676758.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!