இந்தியாவிற்கு பயணமாகும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27) இந்தியாவின் புது தில்லியில் குறிப்பிடத்தக்க உலகளாவிய நிகழ்வுகள் குறித்து உரை நிகழ்த்த உள்ளார்.
இந்தச் சொற்பொழிவு நாளை (28) புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இராஜதந்திரிகள் பங்கேற்கும் வகையில் நடைபெறும்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் ஆகியோரும் இங்கு உரை நிகழ்த்துவார்கள்.
தெற்காசியா குறித்த சொற்பொழிவை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிகழ்த்துவார்.
இந்த இந்திய விஜயத்தின் போது ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் ஒரு சந்திப்பும் நடைபெற உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்




