ஐ.நா மனித உரிமைகள் பேரவை இலங்கை விடயத்தில் மோசமாக நடந்துக்கொள்கிறது - ரணில்!

#SriLanka #Ranil wickremesinghe #UN
Dhushanthini K
2 months ago
ஐ.நா மனித உரிமைகள் பேரவை இலங்கை விடயத்தில் மோசமாக நடந்துக்கொள்கிறது - ரணில்!

ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் உக்ரைனையும் இலங்கையையும் வித்தியாசமாக நடத்துவதன் மூலம் இரட்டை நிலைப்பாட்டைப் பின்பற்றுகிறது என்பதை எடுத்துக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தற்போதைய அரசாங்கமும் மற்ற அரசியல் கட்சிகளும் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று  கூறியுள்ளார்.

"இந்த ஆண்டு செப்டம்பரில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் ஒரு தீர்மானத்தை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இலங்கை அரசாங்கமும் பிற பங்குதாரர்களும் இந்த விஷயத்தை இப்போதே கவனத்தில் எடுத்துகொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

போர் நடக்கும் காலப்பகுதியில் அந்நாடுகள் தேர்தலை ஒத்திவைத்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இலங்கையில் வடக்கில் விடுதலைப் புலிகளும் தெற்கில் ஜேவிபியும் சண்டையிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் நாங்கள் தேர்தல்களை நடத்தினோம். இலங்கை சரியான நேரத்தில் தேர்தல்களை நடத்தியது எனவும் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் இரட்டைத் தரங்களைப் பின்பற்றுகிறது, அவர்கள் இலங்கையை வித்தியாசமாக நடத்துகிறார்கள் என அவர் மேலும் கூறியுள்ளார்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1740627012.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!